தலீபான் தீவிரவாதிகள் பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பார்யப் (Faryab) பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது.
அந்த பறவையை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது, அது பலத்த படுகாயங்களுடன் கீழே விழுந்தது.
இதனையடுத்து அதை சோதித்த இராணுவ வீரர்கள், அதன் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கமெரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை, தொலைநிலை கட்டுப்பாட்டின் (Remote Control) மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே இராணுவ வீரர்கள் பறவையை சுட்டுக் கொன்றதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பொலிஸ் மூத்த அதிகாரி அகமதுல்லா (Ahmadulla) கூறியதாவது, தலீபான் தீவிரவாதிகள் இதற்கு முன்பு கழுதைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் தற்போது ஏராளமான பறவைகளுக்கு பயிற்சி அளித்து புதிய தற்கொலைப் படையை உருவாக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தலீபான்களின் இந்த பயங்கர செயல், ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. -http://world.lankasri.com
Kamal oru brilliant