மக்களை கொன்று குவிக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகள்: 150 பேர் பலி

Boko-Haram-leaderநைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பகுதிகளில் அமைந்த டமாடுரு நகரில் கடந்த 1ம் திகதி போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் இம்மானுவேல் ஒஜக்வூ கூறுகையில், போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 115 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

ஆனால் அவர்கள் பொதுமக்களா அல்லது ஊடுருவல்காரர்களா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் மற்றும் 38 பொலிசார் பலியாகியுள்ளனர் என்றும் தொடர்ந்து மீட்பு படையினர் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் இருந்து மக்கள் தப்பி செல்லும்போது ஏற்பட்ட காயத்தால் பலர் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 78 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் அவர்களில் 53 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் மீட்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com