சிரியா மற்றும் ஈராக்கிற்கு போரில் பங்கேற்க சென்ற பிரெஞ்ச் ஜிகாதிகள், அங்கே இருக்கும் அதிக குளிர் மற்றும் வீட்டில் இருப்பது போல சுகமான வசதிகள் இல்லாததால், தாய் நாட்டுக்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் போர் முனையில் இருக்கும் பிரெஞ்சு ஜிகாதிகள் சிலர் தங்கள் குடும்பங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அனுப்பிய கடிதங்களை பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரும்பி சென்ற சிலர், தற்போது உடனடியாக தாய்நாட்டிற்கு திரும்ப விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மீண்டும் தாயகம் திரும்பினால் எனக்கு என்ன நேரும்?, நான் சிறை தண்டனையை தவிர்க்க முடியுமா?, இங்குள்ளவர்கள் எங்களை ஏற்பார்களா போன்ற கவலைகளையும் அதில் பதிவு செய்துள்ளனர்.
அந்த கடிதங்களில் ஒன்றில், ஆடைகள் மற்றும் உணவு விநியோகம் செய்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆயுதங்களை சுத்தம் செய்ய உதவியும் பின்னர் போரில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லவும் மட்டுமே செய்துள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கடிதத்தில், இங்கு குளிர்காலம் தொடங்க இருக்கிறது, அது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் மற்றொரு கடிதத்தில், அவர்கள் என்னை போரில் முன்வரிசையில் நிற்க விரும்பினாலும், எனக்கு எவ்வாறு போரிட வேண்டும் என்பது தெரியாது என தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் வீட்டில் இருப்பது போன்ற வசதிகள் இங்கு இல்லாததால் சோர்வாக உணர்வதாகவும், மற்றொருவர் தனது ஐ-பாட் உடைந்துவிட்டது. நான் திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவி்த்துள்ளார். -http://world.lankasri.com
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை .