நைஜீரியாவில் சிறையொன்றிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர்.
வாரி நகரில் அமைந்துள்ள சிறையில் சனிக்கிழமை காலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கிருந்த காவலர்களை மிரட்டி சிறைக் கைதிகளை விடுவித்ததாக அச்சிறைச்சாலையின் துணைக் கண்காணிப்பாளர் இப்ராஹிம் கம்பாரி தெரிவித்தார். தப்பிய கைதிகளில் பத்து பேர் காவலர்களிடம் பின்னர் சிக்கினர் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த மாதம் தென்மேற்குப் பகுதியிலுள்ள எகிட்டி மாவட்டத்தில் உள்ள சிறையில், சில நபர்கள் குண்டுவெடிப்பு நிகழ்த்தி 300-க்கும் மேற்பட்ட கைதிகளைத் தப்ப வைத்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சிறைச்சாலை வெளி மதில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது இதைத் தொடர்ந்து, 144 கைதிகள் தப்பினர்.
சிறையிலிருந்து கைதிகளைத் தப்ப வைத்த சம்பவங்களுக்குப் பின்னணியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. -http://www.dinamani.com