விமானத்தில் பயணம், ஐ போன் 6 பிளஸ் என்ற விலை உயர்ந்து செல்போன் என மிக ஆடம்பர வாழ்க்கைய வாழ்ந்து வரும் சீனாவின் தொழில்முறைப் பிச்சைக்காரர்கள் குறித்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்கிங் நகராட்சியில் இருக்கும் சில பிச்சைக்காரர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சில தொழில்முறைப் பிச்சைக்காரர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முதலில் தாங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும், குடும்பத்தை பிரிந்து இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் காவல்துறை விடவில்லை, அவர்களை தீவிரமாக விசாரித்து, அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதித்தபோது, ஒரு பிச்சைக்காரர் மிகவும் விலை உயர்ந்து ஐ போன் 6 பிளஸ் ஒன்றை வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதும், வரும் புத்தாண்டைக் கொண்டாட சுமார் 10 ஆயிரம் அளவுக்கு சேமித்து வைத்திருப்பதும், அவர்கள் பிச்சையை தொழிலாகவே செய்து வருவதும் தெரிய வந்தது. -http://www.dinamani.com