ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிகரித்துக்கொண்டே போகும் இடைவெளி

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிகரித்துக்கொண்டே போகும் இடைவெளியைக் குறைக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக நாடுகள் கோரப்பட்டுள்ளன.

poor
ஆடம்பர உடையுடன் செல்லும் பெண்ணை பார்க்கும் ஏழை சீனர்

 

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாக காணப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் பொருளாதாரரீதியாக கீழ் மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினர் சம்பாதிக்கும் தொகையை விட மேல் மட்டத்தில் உள்ளோர் ஒன்பதரை மடங்கு கூடுதலாக சம்பாதிப்பதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.

பொருளாதார பின்னடைவு காரணமாக கல்வி கற்பதிலும் வறியவர்களுக்குத் தடை ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூகப் பொருளாதார முன்னேற்றங்களும் குறைந்து போகின்றன.

பல நாடுகளின் வரிவிதிப்பு முறைகள் செல்வந்தர்களுக்கு சாதகமாக உள்ளதாக ஒரு விமர்சனம் உள்ளது. பணம் படைத்தவர்கள் சட்டப்படி குறைவாக வரியை கட்ட வழி செய்யும் பல சலுகைகள் வரி விதிப்பு தொடர்பான சட்டங்களில் இருக்கின்றன. -BBC