கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம்

cia_torture_001அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களை கைது செய்து கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் சிஐஏ அடைத்தது.

அவர்களிடமிருந்து அல்கொய்தாவில் எதிர்கால திட்டங்களை அறிந்து கொள்வதாக கூறிய சிஐஏ மோசமான சித்திரவதைகளை கையாண்டது அவ்வப்போது சர்ச்சையாக வெளிவந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் சிஐஏவின் இந்த சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்காவின் செனட் புலனாய்வுக் குழு தற்போது சுமார் 500 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனை இக்குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, விசாரணை கைதிகளை மாதக் கணக்கில் தூங்கவிடாமல் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

  • குறுகிய சங்கிலி ஒன்றின் மீது நிற்க வைத்து பல மணிநேரம் குனிந்தே நிற்கும் படி செய்தும் உள்ளனர்.
  • பல கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு மலத் துவாரம் வழியே நீர் மற்றும் உணவை செலுத்தி மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்துள்ளனர். இதில் ஒரு விசாரணைக் கைதி மரணமடைந்தும் போயுள்ளார்.
  • உண்மையை வரவழைக்க நாய்களை காது அருகே குரைக்க விடுவது, பாடல்களை மிக அதிக சப்தமாக பாடவிடுவது.
  • இப்படி கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு உருப்படியான தகவலையும் பெறவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.ஆனால் சிஐஏவின் இயக்குநர் ஜான் ப்ரென்னன், தாங்கள் கடைபிடித்த விசாரணை முறை சரியானதே… விசாரணை கைதிகளிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றோம் என கூறியுள்ளார்.மேலும், சிஐஏவின் இந்த சித்திரவதை நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
  • -http://world.lankasri.com
  • https://www.youtube.com/watch?feature=player_embedded&v=OtVkAw8xOhs