ரஷிய மேற்பார்வையில் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு: சிரியா அதிபர் ஆர்வம்

syrian_priரஷியாவின் மேற்பார்வையில், அந்த நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் சிரியா அதிபர் பஷர் அல்-அஸாத் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிரியா அரசு செய்தி நிறுவனமான “சனா’ தெரிவித்துள்ளதாவது:

ரஷிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மிகயீல் போக்தனோவ், சிரியா அதிபர் அல்-அஸாதை வியாழக்கிழமை சந்தித்தார்.

அப்போது, சிரியா அரசுக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் ரஷியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான திட்டத்தை மிகயீல் போக்தனோவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அரசுடன் பேசி வருவதாகவும் முதல்முறையாக மிகயீல் போக்தனோவ் கூறினார்.

அதிபர் அல்-அஸாத், மிகயீல் போக்தனோவின் பேச்சுவார்த்தைத் திட்டம் குறித்த தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

ரஷியா எப்போதும் சிரியா மக்கள் பக்கம் உள்ளதாகவும், சிரியாவின் இறையாண்மையை அந்த நாடு மதிப்பதாகவும் அஸாத் பாராட்டினார் என்று சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. -http://www.dinamani.com