அமெரிக்க பத்திரிகையாளரின் உடலை விற்கிறோம்: விலைபேசும் ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_sells_001சிரியாவில் தலைத் துண்டித்து கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளரின் உடலை விற்க ஐ.எஸ்.ஐ.எஸ் பேரம் பேசி வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்கள் பிணைக்கைதியாய் பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை (James Foley) தலைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தது.

இதனை தொடர்ந்து ஸ்டீவ் சொடோ லோப், பீட்டர் காசிக் ஆகியோரும் தலைத் துண்டித்து கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜேம்ஸ் போலேயின் உடலை அவரது உறவினரிடம் கொடுக்க உடலுக்கு 1 மில்லியன் டொலர்கள் வரை நிர்ணயம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தீவிரவாதிகள் கூறியதாவது, 1 மில்லியன் டொலர்கள் கொடுத்தால் மட்டுமே ஜேம்ஸின் உடலை தருவோம் என்றும் ஜேம்ஸை பரிசோதித்து பார்த்து விட்டு அவரது உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

ஜேம்ஸின் உடலை வாங்க விரும்பிய குடும்பத்தினரும் தீவிரவாதிகளிடம் பேரம் பேசியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.

இதற்கிடையே ஜேம்ஸின் உடலை துருக்கியில் ஒருவரிடம் விற்கவும் தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களுக்கு தேவையான நிதியை திரட்ட தீவிரவாதிகள் பிணைக்கைதிகளை கடத்தி பணம் பறிக்க முயல்கின்றனர் என்றும் அதற்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒப்புக் கொள்ளாததால்தான் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -http://world.lankasri.com