அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹொட்டலொன்றில், தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை மீட்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீவிரவாதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் ஆபத்ததான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியதுடன், பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர வாத தாக்குதலில் பலியான சட்டத்தரணி Katrina Dawson, வயது 38 மற்றும் கபே முகாமையாளர் Tori Johnson, 34 தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=6tKE2SGBX0I
அவுஸ்திரேலியாவின் சிட்னி ஹொட்டல் வளாகத்தில் நடப்பது என்ன?
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கபே என்ற பிரபல ஹொட்டலில் இருந்த பொதுமக்கள், ஊழியர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்திருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது
இது குறித்த தகவல் வெளியானதும் பொலிஸாரும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு விரைந்தனர். தொலைக்காட்சி சேனலில் காட்டப்பட்ட காட்சி ஒன்றில், ஓட்டலுக்குள் பிடிபட்டிருக்கும் பொதுமக்கள் சிலர் ஜன்னலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கைகளில் கருப்புக்கொடி கொடுக்கப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
அந்தக் கொடியில், வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இது இஸ்லாமிய போராளிகள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் செயலாக இருக்கலாமோ என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். ஹோட்டலில் பிணைக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசித்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அபாட் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சிரியா, இராக்கில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவுடன் அவுஸ்திரேலியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ். அமைப்பு இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியர் சிக்கியிருப்பதாக தகவல்:
சிட்னி ஹொட்டலில் எத்தனை பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அங்கி இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக மக்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிட்னி ஹொட்டலில் இன்போசிஸ் ஊழியர்
சிட்னியில் லிண்ட் கபே ஹொட்டலில் பிணைக்கைதிகளாக சிக்கியிருப்பவர்களில் தங்கள் நிறுவன ஊழியர் ஒருவரும் அடங்குவார் என பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவன தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிவிக்கையில்; “அவுஸ்திரேலியாவில் உள்ள எங்களது நிறுவனத்தின் மற்ற ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இந்தியத் தூதரகத்தோடு தொடர்பில் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஹொட்டலில் இருந்து எங்கள் ஊழியர் உள்பட அனைத்து பிணைக்கைதிகளும் பத்திரமாக திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபருடன் போலீஸ் தொடர்பு:
ஹொட்டலில் ஊழியர்கள், பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ள மர்ம நபரை பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிணைக்கைதிகளை பிடித்துவைக்க காரணம் என்ன? அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
5 பேர் தப்பினர்:
இந்நிலையில்,ஹொட்டலில் இருந்து 5 பிணைக்கைதிகள் தப்பிவந்தனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை, மெல்போர்ன் பொலிஸ் துணை ஆணையர் கேத்தரின் பர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி கண்டனம்:
அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில், “சிட்னியில் நடைபெறும் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. மனிதாபிமானமற்ற, துரதிர்ஷ்டவசமான சம்பவம். பிணைக்கைதிகளாக இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸி., பிரதமர் ஆறுதல்:
சிட்னி நகரின் மார்டின் பிளேஸில் பிணைக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் வருத்தமளிக்கிறது. இருப்பினும், அவுஸ்திரேலியர்கள் பீதியடைய வேண்டாம். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிறுவனங்கள் நிலைமையை திறம்பட கையாண்டு வருகிறது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி் ஆபோட் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதரகம் மூடல்
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளியுறவுச் செயலர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்,அவுஸ்திரேலிய சம்பவத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
thehindu.com
அவுஸ்திரேலியாவில் பதற்றம்! பயங்கரவாதிகளால் 50 பொதுமக்கள் சிறைபிடிப்பு! மகிந்த ராஜபக்ச கவலை தெரிவிப்பு!
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கறுப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்றது.
இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு-
தற்போதைய தகவல்களின் பிரகாரம் 50 பொது மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிட்னி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும், ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது.
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய தகவல்
தற்போது தீவிரவாதி இருக்கும் அறைக்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சற்று பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
3ம் இணைப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை தெரிவிப்பு
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் 20 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்குமென அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில், ஜனாதிபதி: சிட்ணி பிணைக்கைதி நிலைவரம் பற்றி ஆழ்ந்த கவலை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார். -http://www.tamilwin.com