வட-கிழக்கு நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய போராளிகள் குறைந்தது 33 பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் பலரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சக கிராமவாசிகள் கூறுகின்றனர்.
போர்னோ மாநிலத்தில் உள்ள கும்சூரி கிராமத்திலிருந்து இளைஞர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் போக்கோ ஹராம் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த ஞாயிறன்றே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனினும் தப்பிவந்தவர்கள் மைதுகிரி நகரை வந்தடைந்த பின்னரே, தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, நைஜீரிய எல்லை அருகே உள்ள இராணுவ முகாம் ஒன்றைத் தாக்கிய நூற்றுக்கும் அதிகமான ஆயுததாரிகளை கொன்றுள்ளதாக அண்டை நாடான கேமரூனின் இராணுவம் கூறியுள்ளது. -BBC