ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் முக்கிய தலைவர்கள் பலி

isis_irakஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம்களின் மீது கடந்த சில வாரங்களாக அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் சில முக்கியத் தலைவர்கள் பலியாகியுள்ளனர் என்றும் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 3 தலைவர்கள் இறந்துள்ளனர் எனவும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி (John kerby) கூறியதாவது, கடந்த நவம்பர் மாதம் முதல், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமை மீது குறி வைத்து நிகழ்த்திய தாக்குதல்கலில், ஐ.எஸ்.ஐ.எஸ்-யை சேர்ந்த ஏராளமான மூத்த தலைவர்கள் மற்றும் இடைநிலை கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

தற்போது அமெரிக்கா தலைமையிலான 40 நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை  நடத்தி வருகின்றனர்.

மேலும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அந்நாட்டு இராணுவத்தினர் மீட்பதற்கு, அமெரிக்க கூட்டுப் படையினர் உதவி செய்வர் என கூறியுள்ளார்.

-http://world.lankasri.com