பாகிஸ்தானின் பல இடங்களில் தமது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், டசின் கணக்கான தீவிரவாதிகளை கொன்றுள்ளதாகவும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கைபர் பகுதியில் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக முன்னணி பத்திரிகையான டாண் கூறியுள்ளது.
அந்தப் பகுதிக்கு இராணுவ தளபதி ரஹீல் செரிஃப் பயணம் செய்திருக்கிறார்.
இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, ‘’ தமது மண்ணில் இருந்து இறுதி தீவிரவாதி ஒழிக்கப்படும் வரை அந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தலிபான்கள் தமது பாதையில் பயணத்தை நிறுத்திக் கொண்டாலும், ஏனையவர்கள், அதே பாதையில் பயணத்தை தொடர முன்வருவார்கள் என்று பாகிஸ்தானில் பிரபலமான கடும்போக்கு மதகுரு ஒருவர் கூறியுள்ளார். -BBC
பள்ளி குழந்தைகளை படுகொலை செய்த தலிபான் தலைவன் பலி
பெஷாவர் குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பெறுப்பான தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா (Maulana Fazluahh), பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இச்செய்தியை தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.
-http://world.lankasri.com
தீவிரவாதிகளை ஏதோ ‘தெய்வவாதிகளை’ போல அடைக்கலம் கொடுத்து ஆதரித்தால் இப்படித்தான் நடக்கும். நாடகம் இன்னும் முடியவில்லை! தொடரும்!