பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்ப்பது பற்றி தனது நிர்வாகம் மறுபரிசீலனை செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் வடகொரிய அரசு உள்ளது என அமெரிக்கா பழிசுமத்தியிருந்தது.
சோனி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட ஹேக்கிங், மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய இணைய வழி அடாவடித்தனம் என சி என் என் தொலைக்காட்சிக்கு அதிபர் ஒபாமா வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த மறுபரிசீலனை முடிந்தவுடன் உரிய பதில் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்ற வீண்பழி என வடகொரியா கூறுகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருபது ஆண்டு காலம் இருந்துவந்த வடகொரியாவை 2008ஆம் ஆண்டில் அப்போதைய புஷ் நிர்வாகம் நீக்கியிருந்தது. -BBC