பக்கத்தான் ரக்யாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் அக்கூட்டணியின் தலைவர் மன்றக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றுகூட நினைக்கத் தொடங்கி விட்டார்.
“பாஸின் மத்திய செயல்குழுவுக்குக்குக்கூட தெரியாமல் ஹுடுட்டைக் கொண்டுவர கிளந்தானில் சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படுகிறது என்றால் இனி பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டங்களுக்குச் செல்வதில் பொருளில்லை என்றுதான் நினைக்கிறேன்.
“அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்யும் பொறுப்பை கட்சியிடமே விட்டு விடுகிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
சில பாஸ் தலைவர்கள், 13வது பொதுத் தேர்தலில் வாக்காளர்களிடம் தவறான தகவல் சொல்லி நம்ப வைத்தது தப்பில்லை என்று கூறியிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக லிம் கூறினார்.
ஹுடுட் அமலாக்கத்தில் பக்கத்தானின் பொதுவான கொள்கைக்கிணங்க நடந்து கொள்வதாகவும் தன்மூப்பாக செயல்படுவதில்லை என்றும் கூறியதை பாஸ் மீறியிருப்பதைக் குறிப்பிட்டுத்தான் லிம் அவ்வாறு கூறினார்.
இப்போதைய குழப்பநிலை 2001-இல், மாற்று பாரிசான் கூட்டணியில் பாஸ் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் திட்டத்தில் முனைப்பாக இருந்ததால் டிஏபி கூட்டணியிலிருந்து விலக, கூட்டணி கலைந்துபோன சம்பவத்தைத்தான் நினைவுபடுத்துகிறது.
கிழவனுக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கு.