புத்ராஜெயா மருத்துவமனைக்கு டாக்டர் ஹஸ்மா அலியின் பெயரைச் சூட்ட பெரிக்கத்தாான் பரிந்துரை

நாட்டின் பொது சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்கு டாக்டர் ஹஸ்மா அலி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், புத்ராஜெயா மருத்துவமனைக்கு அவரது பெயரைச் சூட்ட எதிர்க்கட்சி பரிந்துரைத்துள்ளது.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைத்தால், இந்த முன்மொழிவைச் செயல்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

இந்த பெயர் மாற்றத்தை முன்மொழிகிறோம். தற்போதைய அரசாங்கம் இதைச் செய்யாவிட்டால், அடுத்த முறை நாங்கள் அதைச் செய்வோம் என்று லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா, இன்று நாடாளுமன்றம் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பஜெட்) மீதான விவாதத்தின் போது கூறினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் மனைவியின் பெயரை இந்த மருத்துவமனைக்குச் சூட்ட வேண்டும் என்று மஸ் எர்மியாத்தி சம்சுடின் (பெரிகாத்தான் நேஷனல் – மஸ்ஜித் தானா) முன்வைத்த பரிந்துரையை அவர் ஆதரித்தார்.

டாக்டர் ஹஸ்மா செப்டம்பர் 28 அன்று தேசிய இதய நிறுவனத்தில் (IJN) தனது 100-ஆவது வயதில் காலமானார், மேலும் அவரது உடல் புத்ராஜெயா, பிரசிண்ட் 20-இல் உள்ள புசாரா நெகாரா (தேசிய விவிஐபி மயானம்) நல்லடக்கம் செய்யப்பட்டது.

விவாதத்தின் போது, வைப்பாளர்கள் ஹஜ் காத்திருப்புப் பட்டியலுக்குத் தகுதி பெறுவதற்காக தபுங் ஹாஜி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சேமிப்புத் தேவையான 15,000 ரிங்கிட் என்ற நிபந்தனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஹம்சா வலியுறுத்தினார்.

சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கும் கிராமப்புற மக்களுக்கு இந்த நிபந்தனை சுமையாக மாறக்கூடும் என்றும், தற்போது காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் வைப்பாளர்கள் தங்களின் இடங்களை இழக்க நேரிடும்.

அரசாங்கம் எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக செயல்படாமல், நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்வதற்கான ஒரு  அதிகாரச் சமநிலை) அமைப்பாக எதிர்க்கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் ஹம்சா கூறினார்.

 

 

 

-fmt