நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் அனைத்து வாகன நடமாட்டங்களுக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் நடத்தப்படக் கூடியத் தாக்குதல்களை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனத் தடை இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
இதையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்லும் நடவடிக்கையை விரைவுபடுத்தி வருகின்றனர்.
நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள போர்னோ, யோபே மற்றும் அடாமவா ஆகிய மாகாணங்கிலேயே போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் செயல்பாடு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளில், அந்தத் தீவிரவாதிகள் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அவ்வகையில் 2011 ஆம் ஆண்டு நாட்டின் தலைநகர் அபுஜாவுக்கு அருகே உள்ள ஒரு தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். -BBC