வெள்ள உதவிக்கு ரிம50 மில்லியனை அமைச்சு ஒதுக்கியது

hus niவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாநிலங்களில்  துயர்துடைப்புப்  பணிகளுக்காக  ரிம50 மில்லியனை  ஒதுக்கியிருப்பதாக  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா  அறிவித்துள்ளார்.

பெர்னாமா  செய்தியின்படி, கிளந்தான், திரெங்கானு, பகாங், பேராக், பெர்லிஸ்  ஆகிய  மாநிலங்களில்  90,250 பேர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

வெள்ள  உதவி  நிதி  மாநில  மேம்பாட்டு அலுவலகங்களிடம்  கொடுக்கப்படும்  என  அமைச்சர்  கூறியதாக  தேசிய  செய்தி  நிறுவனம்  தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு  வெள்ள  உதவிக்கும்  மீட்புப்  பணிகளுக்கும்  தேவையான தளவாடங்கள்  கிடைப்பதற்கும்  அமைச்சு  உதவும்.