ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக குடியேற சென்ற 1300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எனவே அங்குள்ள மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக படகு மூலம் செல்கின்றனர்.
அப்படி செல்லும் அவர்கள் இத்தாலி கடற்பகுதியை தாண்டிதான் செல்ல வேண்டும். படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் பேர் பயணம் செய்வதால் நடுக்கடலில் கவிழ்ந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
எனவே சட்டவிரோதமாக வருபவர்களை இத்தாலி கடற்படை அவ்வப்போது மீட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்புகிறது.
இதேபோல் கிறிஸ்துமஸ் நாளான நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் 1300 பேரை இத்தாலி கடற்படை மீட்டுள்ளது.
இதில் நைஜீரிய பெண் ஒருவர் படகிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மற்றொரு படகில் பயணம் செய்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி வரை இத்தாலிக்கு கடல் வழியாக 167462 பேர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com