நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின் இராணுவம் கூறுகிறது.
கேமரூனின் வான் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்குமான கடும் சண்டை காரணமாக, கேமரூனின் படைகள் கைவிட்ட ஒரு இராணுவ தளத்தை, சிறிது நேரம் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர்.
இதனிடையே கேமரூனின் வடபகுதிக்குள் பல வழிகளில் புகுந்துள்ள போக்கோ ஹராம், ஆட்களை கடத்தியும் கொலையும் செய்துள்ளனர்.
அதேவேளை அவர்கள் புகுந்துள்ளப் பகுதிகளில் சிறார்கள் உட்பட பலரை தமது அமைப்பில் சேர்த்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. -BBC