பத்து வயதுச் சிறுமிகளை அவர்களின் தந்தைமார்கள் பணத்துக்காக எழுபது வயது “மாப்பிள்ளைக்கு” திருமணம் செய்வது அதிகரித்து வருவதால் பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அண்மைக்காலங்களாக இது தொடர்பாக கடும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் ஆலோசனைச் சபையாகக் கருதப்படும் மூதவையான Shura Councilஇன் (also known as Majlis as-Shura) அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களின் திருமண வயதைப் பற்றி அறிய அங்கு உள்ள ஆட்சி முறைமை பற்றி அறிதல் அவசியம்.
மன்னர் பரம்பரை ஆண்டுவரும் சவுதி அரேபியாவில் மன்னரே உச்ச ஆட்சியாளராகவும் தலமை அமைச்சராகவும் படைத்துறைத் தளபதியாகவும் இருக்கின்றார். மன்னர் தனது அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிப்பார். பெரும்பாலும் அவரது குடும்ப உறுப்பினர்களே அமைச்சராக நியமிக்கப்படுவர். தற்போது 22 பேர் கொண்ட அமைச்சரவை இருக்கின்றது. ஆண்களை மட்டும் கொண்ட அமைச்சரவைக்கு 2009-ம் ஆண்டு ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சவுதில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளமன்றம் என ஒன்று இல்லை. மன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஷுரா சபை எனப்படும் ஆலோசனை சபைக்கு 150 உறுப்பினர்களை நியமிப்பார். முதலில் இச் சபைக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். 2011-ம் ஆண்டில் இருந்து பெண்களும் நியமிக்கப்படுகின்றனர். தற்போது உள்ள நடைமுறைப்படி 20 விழுக்காடு உறுப்பினர்கள் அதாவது 30 உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஆலோசனை சபைக்கான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை மன்னர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இச்சபையின் ஆலோசனையின் பேரில் மன்னர் சட்டங்களை அங்கீக்கரிப்பார்.
மனித உரிமைகள், கல்வி, கலாச்சாரம், தகவற்பரிமாற்றம், ஆரோக்கியம், சமூகவிவகாரம், பொதுச் சேவைகள், பொது வழங்கல்கள், வெளிவிவகாரம், பாதுகாப்பு, நிர்வாகம், இசுலாமிய அலுவல்கள், பொருளாதாரம், தொழில்துறை, நிதி ஆகியவை தொடர்பாகக் கவனிக்க 12 குழுக்கள் இருக்கின்றன. சவுதியின் உள்ளூராட்சிச் அவைகளுக்கான உறுப்பினர்களை 21 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் வாக்களித்து தெரிவு செய்கின்றனர்.
பெண்களின் திருமண வயது தொடர்பான சட்ட மூலம் பெண்களின் திருமணவயது 18 என் வரையறை செய்கின்றது. 18 வயதிற்குக் குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வதாயின் மூன்று முக்கிய நிபந்தனைகளை அச்சட்ட மூலம் விதித்துள்ளது:
திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் பாதுகாவலர் நீதி மன்ற அனுமதி பெற வேண்டும். அப் பெண் தொடர்பாக மகப்பேற்றியல், உடற்கூற்றியல் நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் பெற்றோர் தொடர்பான அறிக்கையை நீதிபதி பெறவேண்டும்.
திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் திருமணத்திற்கு நீதிமன்றில் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அப்பெண்ணின் மன நிலை திருமணத்திற்கு தயாராகும் வரை காத்திருக்க வேண்டும்.
சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது. அங்கு பெண்கள் மகிழூர்திகள் ஓட்டுவதற்கு எதிராகச் சட்டம் இல்லை ஆனால் அவர்கள் செலுத்துனர் அனுமதிப்பத்திரம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. 25 வயதானLoujain al-Hathloul, என்னும் பெண்ணும் 33 வயதான Maysa al-Amoudi என்னும் பெண்ணும் மகிழூந்திகளை செலுத்தியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் முக்காடு நீக்கிய நிலையில் தமது உருவப்படங்களை சமூகவலயத் தளங்களில் பதிவேற்றியமைக்காகவும் தண்டிக்கப்படவிருக்கின்றார்கள்.
வேல்தர்மா-
-http://www.tamilcnnlk.com
அக்காலத்தில் 6 வயது சிறுமியை திருமணம் செய்தார்கள். இப்பொழுது 10 வயது சிறுமி,இன்னும் சில ஆண்டுகள் சென்றால்,பிறந்த குழந்தையை திருமணம் செய்வார்கள்.காம வெறி பிடித்தா மிருகங்கள்.குரு சரியாக இருந்தால்தானே குருவை பின்பற்றுகிற சீடன் ஒழுங்காக இருப்பான்.
குரங்க்கிட்கு வெள்ளரிப்பிஞ்சு !!! அரேபியா boleh!
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமட ,,,,,,,,,,,அந்த மணமகள் தான் வந்த நேரமடா
மின்மினி கருத்தை ஆமோதிக்கிறேன் ??
தந்தை பெரியார் தனது வளர்ப்பு மகளை ??????????