இயற்கைக்கு மாறாக வெள்ளைத் தோலுடன்(அல்பைனோ) பிறந்த பெண் ஒருவர் காணமல் போனது குறித்து நான்கு பேரை தான்சானியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நாட்டின் வட பகுதியில் உள்ள மவாசா என்ற இடத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் காணமல் போனதையடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அந்தச் சிறுமி கடத்தப்பட்டது தொடர்பில் அவருடைய தந்தை உட்பட பலரிடம் விசாரணைகள் நடைபெறுகின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய காவல்துறை முயன்று வருகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை அவ்வகையில் வெள்ளை தோலுடன் பிறந்தவர்கள் 74 பேர் தான்சானியாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இப்படிக் கொல்லப்படுவோரின் உடல் உறுப்புக்கள் – அதிர்ஷ்டப் பொருட்களாக – 600 டாலர்கள் வரை விலைக்கு விற்கப்படுகின்றன. -BBC