ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி
பெட்ரோல் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, யூரோ வலயத்தில் கிரேக்கம் தொடர்ந்து இருக்குமா இல்லையா என்பது குறித்த தெளிவின்மை ஆகியவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஹொங்காங்கில் ஹாங்செங் பங்குச் சுட்டெண் ஒரு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
டோக்கியோவில், நிக்கி சுட்டெண் 3 வீதத்தால் வீழ்ச்சி கண்டது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் திங்களன்று ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து அவை ஸ்திரமடைந்துவிடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவை இன்று சற்று ஏற்றத்துடன் வணிகத்தை தொடங்கின.
பெட்ரோலிய விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன.
இந்த வீழ்ச்சிகள் உலக பொருளாதாரம் மந்தமடைவதை காண்பிக்கிறதோ என்று முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். -BBC