சுவிஸிலும் வலுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு: ரகசிய போராட்டம் நடத்த திட்டம்

swiss_pegida_001ஜேர்மனியில் இஸ்லாமியத்திற்கு எதிராக உருவாகியுள்ள Pegida என்னும் அமைப்பு தற்போது சுவிட்சர்லாந்திலும் ரகசிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம், ஜேர்மனியின் இஸ்லாமியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் Pegida என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த அமைப்பினர் சுவிஸில் அடுத்த மாதம் ரகசிய இடம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் பிரான்ஸில் நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஜேர்மனியைச் சேர்ந்த Pegida அமைப்புக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த Pegida அமைப்பினர் வெளியிட்டுள்ள 14 அம்சங்களில் சுவிஸில் உள்ளவர்கள் உடல் மற்றும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்காவிற்கு தடைவிதிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

-http://www.coolswiss.com