நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான பாகா நகர மக்களை படுகொலை செய்தது தங்களது இயக்கம்தான் என போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷேகா கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில், நைஜீரியாவின் பாகா நகரிலுள்ள ராணுவ தளத்தை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து அந்த நகரை முற்றிலும் தரை மட்டமாக்கிய பயங்கரவாதிகள், நகரில் வசித்த சுமார் 2,000 பேரை படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட விடியோ காட்சியில் தோன்றிய போகோ ஹராம் தலைவர் அபு பக்கர் ஷேகா கூறியுள்ளதாவது: பாகா நகர மக்களைக் கொன்றது நாங்கள்தான்.
எங்களது புனித நூலில், எங்கள் கடவுள் இட்ட கட்டளையின் அடிப்படையிலேயே நாங்கள் அவ்வாறு செய்தோம். எங்களை ஒடுக்குவதற்காக நைஜீரியாவைச் சுற்றியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இது மிகவும் காலதாமதமான நடவடிக்கையாகும்.
அந்த நாடுகள் மீது இப்போதும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கு நான் தயார் என்று அபு பக்கர் ஷேகா கூறினார்.
-http://www.dinamani.com
இது என்னய்யா கொடுமை!!! மனிதர்களை கொள்ளுவதற்கு ஒரு மதத்தை மேற்கோள் காட்டுறாங்கள்!!! இன்னொருபக்கம் பெண்களை கற்பழிக்க, பெண்களை காம இச்சை அடிமைகளாய் பயன்படுத்த, பெண்களை போர்க்கைதிகளாய் பிடித்து சென்று வழுக்கட்டாயமாக மதம் மாற்றுவது, பெண்களை காம இச்சை அடிமைகளாய் நாடு சந்தையில் ஏலம் விட்டு விற்பது, போர்க்கைதிகளை காட்டி பிணைப் பணம் கேட்பது, மற்ற மதத்தினரை கொன்று இல்லாதொழிப்பது, மனிதர்களின் தலையை துண்டாக அறுப்பது, 10 வயது சிறுவர்களை கூட தற்கொலை குண்டு தாரியாக பயன் படுத்துவது, 10 வயது சிறுவர்களை கூட மனிதர்களின் தலையை துண்டாக அறுக்க பயன்படுத்துவது, ……………… இன்னும் சொல்ல முடியாத கொடூரங்களை எல்லாம் ஒரு மதத்தையும் கடவுளின் பெயரையும் சொல்லி அரங்க்கேட்ரப்படுகிறது!!! இதை பற்றி எல்லாம் யாருக்கும் கவலை இல்லை நாம் வாழ்ந்தால் போதும், நம் வயிறு நிரம்பினால் போதும், நம் மனைவி, பிள்ளைகள், குடும்பம்….. மேற்குறிப்பிட்டுள்ள கொடூரர்கள் இவ்வுலகத்தை முழுக்க ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டுள்ளனர்!!! இவர்கள் உங்களை, உங்கள் குடும்பத்தினரை கொள்ளும்போது அந்த வேதனை தெரியும்!!! நடுநிலையான இஸ்லாமியர்கள் இந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் போக்கை கண்டித்து தங்களின் இஸ்லாம் மதத்தை இந்த தீவிரவாதிகள் தவறாக கையாள்வதை தடுக்க முன்வர வேண்டும்!!! இன்னும் நிறைய முஸ்லிம்கள் நடுநிளையானவர்களாக பரந்த மனம் கொண்டவர்களும் உள்ளனர் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோமாக!!! ஏனைய மதத்தினரும் தங்களை பலப்படுத்திக்கொண்டு தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிகளை ஆராய வேண்டும்!!! காலம் கடப்பதற்குள் அனைவரும் நடவடிக்கை எடுத்தால் சரி!!!
பயங்கரவாதிகளுக்கென்று தனி புனித நூல்கள் இருக்கின்றன! அவர்கள் கடவுள் சொல்லுகின்ற படியே அவர்கள் செயல்படுகிறார்கள்! வேறு என்ன செய்ய?