வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் தலையை வெட்டுவோம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என வீடியோ ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மொசூல் (Mosul) நகர வீதியில் நின்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோவில் தீவிரவாதிகள் பேசியதாவது, நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா என்றும் அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோ காட்சியில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com