“ஒரு தவளையை இளவரசராக மாற்றுவதற்கு அந்த அந்நிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு இவ்வளவு நிதிகள் எப்படி பிரதமர் நஜிப்புக்கு கிடைக்கின்றன?”
டோனி பிளாயாரின் முன்னாள் பொது உறவு ஆலோசகரை பொதுத் தேர்தலில் வெற்றி பெற நஜிப் நியமித்துள்ளார்
இப்னி இஷாக்: அல்ஸ்டாய்ர் காம்பெல்-லை மறந்து விடுங்கள். நஜிப் ரசாக்கை ஒருவர் மட்டுமே காப்பாற்ற முடியும். ஆம் நஜிப் மட்டுமே நஜிப்பைக் காப்பாற்ற இயலும்.
ஆனால் அது அவருக்கு எப்படி என்று தெரியுமா? அவ்வாறு செய்வதற்கு நல்ல நடத்தையும் நல்ல உணர்வுகளும் அவரிடம் உள்ளதா? அவை அவரிடம் இருந்தால் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் அவர் தமது தோற்றத்தை உயர்த்திக் கொள்வதற்கு ஆலோசகர்களுடைய யோசனைகளுக்குச் செவி சாய்க்க வேண்டியதில்லை. மனுக்குல நாகரீகத்தையும் நியாயத்தையும் அவர் பின்பற்றினால் போதும்.
அவர் அதனைச் செய்யாவிட்டால் அவரையும் அவரது அரசாங்கத்தையும் உண்மையில் காப்பாற்றவே முடியாது. இது அவருக்கு வைக்கப்பட்டுள்ள பெரிய சோதனை. அவர் அந்த சோதனையை எழுதி தாமே தேர்வு பெற வேண்டும். அவருக்காக வேறு யாரும் அதனைச் செய்ய முடியாது.
அந்தச் சோதனை அறையில் “நீங்கள் மட்டுமே”. யாரையும் போலியாக அமர்த்த முடியாது.
மஹிந்தர் சிங்: பொது உறவுகள் பணத்தை விரயம் செய்ய வேண்டாம். நான் தரும் இலவச ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள்
1) ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுங்கள்
2) குற்றச் செயல்களை குறையுங்கள்
3) அமைச்சர் முஹைடின் யாசினை நீக்கி விட்டு கல்வி முறையை முழுமையாக திருத்துங்கள்.
4) எல்லா ஒப்பந்தங்களிலும் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுங்கள்
5) ஊழல் அதிகாரிகளை நீக்குங்கள்
6) தியோ பெங் ஹாக் விவகாரத்தை மறு ஆய்வு செய்யுங்கள்
பிஎன் அதனை செய்ய முடியும் என நான் எண்ணவில்லை. ஆகவே கண்துடைப்புக்காக ஆலோசகர்களுடைய யோசனைகளைப் பெறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். விரயமாகும் விஷயங்களைத் தெளிவாக தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டுள்ளார். பிஎன் நம்மை இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஆளுமானால் நாம் பரம ஏழையாகி விடுவோம்.
குவினோபாண்ட்: அல்ஸ்டாய்ர் காம்பெல் கயிறு திரிப்பதில் வல்லவர். பிரிட்டனில் அவருக்கு நல்ல பெயர் கிடையாது. டோனி பிளாய்ரின் வீழ்ச்சியில் அவருக்கும் பங்கு உண்டு.
உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. கயிறையும் ஒரளவுக்குத் தான் திரிக்க முடியும். அதிகமாகத் திரித்தால் அது முறிந்து விடும். பிரதமருக்கு அவர் ஆலோசனை கூறும் போது கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நல்லது எதுவும் வராது அது வெறுமையான வெப்பக் காற்றாகவே இருக்கும்.
அடையாளம் இல்லாதவன்: டோனி பிளாய்ர் கத்தோலிக்கராக மாறினார். ஆகவே வத்திக்கனுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு நஜிப்புக்கு அவர் தான் யோசனை சொல்லியிருக்க வேண்டும்.
போப்பாண்டவர் சிங்கப்பூருக்கு வருகை அளித்த போது அதற்கு மலேசியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் அது குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கு மலேசிய மக்களை அனுமதித்த டாக்டர் மகாதீர் முகமட் வத்திகன்-மலேசியா உறவுகள் பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை.
இங்கு நம்பகத்தன்மை என்னும் பிரச்னை எழுகிறது. வத்திகனுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அது உண்மையாக இல்லையே- தமக்கு ஆதரவு தர வேண்டும் என நஜிப் கருதும் மக்களை ஏமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைந்துள்ளது.
விரக்தி அடைந்த மனிதர்களே விரக்தி அடைந்த வேலைகளைச் செய்வார்கள். பிரதமருக்கு அந்த முதுமொழி நன்கு பொருந்தும்.
இந்த நாட்டில் வாழுகின்ற கத்தோலிக்கர்களும் கிறிஸ்துவர்களும் அதனைப் புரிந்து கொள்ள முடியும். நஜிப் தமது சொந்த நோக்கங்களுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். தமக்குச் சாதகமாக சூழ்நிலை திரும்பியதும் அவர்கள் மீது மேசையைத் திருப்பும் போது அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவர்.
ஜெடி_யார்: வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் துறைக்கு பெரிய ஒதுக்கீடுகளை நஜிப் ரசாக் விரும்புவதற்கு அதுவே காரணம். அவர் தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்யாவிட்டால் பெர்சே 3.0 அவருடைய அவாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
அவர் கிறிஸ்துவர்களைச் சாடுகிறார். ஆனால் தமது முஸ்லிம் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு ஏன் கிறிஸ்துவர்களை நியமிக்கிறார்? நீங்கள் இனவாதத்தை நாடும் போது முஸ்லிம் அல்லாத நாடுகள் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன என்பது பற்றி ஏன் கவலைப்படுகின்றீர்கள்?
டிகேசி: ஒரு தவளையை இளவரசராக மாற்றுவதற்கு அந்த அந்நிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு இவ்வளவு நிதிகள் எப்படி பிரதமர் நஜிப்புக்குக் கிடைக்கின்றன?
1) மக்கள் வரிப் பணம்
2) சேவகர்கள்
3) தற்காப்பு ஒப்பந்தங்களிலிருந்து கசிவது
4) ரோஸ்மாவின் சேமிப்பு
அந்த நான்காவது வழி சாத்தியமில்லை. ஏனெனில் அதனை வைர மோதிரம் வாங்குவதற்கு அவர் இப்போதுதான் பயன்படுத்தியுள்ளார்.