வடகொரியாவின் கப்பல் எதிப்பு ஏவுகணை சோதனை: அதிர்ச்சியில் உலக நாடுகள்

north_ship_missile_001சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா செய்து வருகிறது.

இந்த நிலையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன.

ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட காட்சியை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட்டதைக் காட்டும் படமும் வெளியாகி உள்ளது.

இது ரஷ்யாவின் கேஎச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப் போன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வடகொரியாவின் கடற்படை பலம் கூடி உள்ளது.

வடகொரியா சமீப காலமாக வான், கடற்படை பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகிற நிலையில், இப்போது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

-http://world.lankasri.com