ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்

yemen_terrorist_001ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்துல்லா பதவி விலகியதுடன், புதிய அரசு பொறுப்பேற்றது.

இங்கு அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹுயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு, பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர்.

ஈரானை சேர்ந்த ஷியா பிரிவான இவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது, இருப்பினும் தீவிரவாதிகளின் கை ஓங்கிய நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தீவிரவாதிகள் டெலிவிஷனில் அறிவித்தனர்.

மேலும் இடைக்கால ஜனாதிபதியாக இருந்த அபேத் ரப்போ மன்சூர் ஹாதியை நீக்கியதுடன், அவருக்கு பதிலாக ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி கவுன்சிலையும் நியமித்தனர்.

தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்ததுடன்,  551 உறுப்பினர்கள் கொண்ட புதிய நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

குடியரசுமாளிகையில் இருந்து வெளியான இந்த அறிவிப்பை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாசித்துள்ளார்.

-http://world.lankasri.com