ஐ.எஸ்.ஐ.எஸ்-யை வேறோடு அழிப்போம்: சபதமிட்டு களமிறங்கும் யாஸிதி மக்கள்

yazidi_training_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்கொள்ள குர்திஷ் படைகளிடம் யாஸிதி இன மக்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஈராக்கின் சிஞ்சார் (Sinchar)மலைப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினத்தவரான யாஸிதி மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை கடந்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

மேலும் யாஸிதி இன சிறுமிகளும் பெண்களும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் அடிமைகளாக்கப்படுகிற கொடூரமும் நடந்தேறி வருகிறது.

யாஸிதிகளுக்கு நேர்ந்த கொடுமையைத் தொடர்ந்தே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்த அமெரிக்கா முன்வந்தது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஆதரவுடன் களத்தில் இருக்கும் குர்திஷ் மாகாணத்தின் அரசு படைகளுடன் யாஸிதிகள் கை கோர்த்துள்ளனர்.

தற்போது யாஸிதிகளுக்கு குர்திஷ் படையான பெஷ்மெர்கா (Peshmerga) ராணுவ பயிற்சி அளித்து வருகிறது.

எனவே இனி ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாஸிதி ராணுவமும் களமிறங்க உள்ளதால், ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகும் சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

-http://world.lankasri.com

“விரைவில் ஐ.எஸ்.ஸூக்கு எதிராக மாபெரும் ராணுவத் தாக்குதல்’

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இராக்கில் கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க மாபெரும் ராணுவத் தாக்குதலை இன்னும் சில வாரங்களில் இராக் ராணுவம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.எஸ்.ஸூக்கு எதிரான சர்வேதேசக் கூட்டுப் படையின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆலன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இதுகுறித்து ஜோர்டான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி: இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது இன்னும் சில வாரங்களில் மாபெரும் தரைவழித் தாக்குதல் நிகழ்த்தப்படும். இந்த நடவடிக்கைகளில் முழுக்க முழுக்க இராக் ராணுவமே ஈடுபடும்.  கூட்டுப் படைகளைப் பொருத்தவரை, இராக் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

-http://www.dinamani.com