இப்படியும் ஒரு மனிதரா? வேலைக்காக தினமும் 34 கி.மீ நடந்து செல்லும் அதிசயம்

james_detroit_001அமெரிக்காவில் நபர் ஒருவர், பேருந்து வசதிகள் இல்லாததால் தினமும் 34 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் சென்று வருகிறார்.

அமெரிக்காவின் பிரபல தொழில் நகரமான  டெட்ராய்ட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட்சன்(வயது 56).

இவர் வேலை செய்துவரும் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து வசதியை நீக்கிவிட்டனர்.

ஆனாலும் சிறிதும் மனம் தளராத ஜேம்ஸ், தினமும் வெயில், பனி, மழை போன்ற எந்தப் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் நடந்து பணிக்கு சென்று வருகிறார்.

இவ்வாறு கடந்த 12 ஆண்டுகளாக விடுமுறை எதுவும் எடுக்காமல் தொடர்ந்து அலுவலகம் செல்லும் இவர் தினமும் நடந்து செல்வதைப் பார்த்து விசாரித்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவவே, ஜேம்ஸுக்கு பலர் ஆதரவு தர முன்வந்துள்ளனர்.

தொடர்ந்து பல முகம்தெரியாத நபர்கள் ஜேம்ஸ் கார் வாங்குவதற்காக நிதி திரட்ட தொடங்கியதில் தற்போது அவருக்கு சுமார் 3,00,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஜேம்ஸுக்கு டெட்ராய்ட்டில் உள்ள கார் நிறுவனம் ஒன்று 37,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஃபோர்ட் டாரஸ் என்னும் புத்தம் புதிய காரினை வழங்கியுள்ளனர்.

இதனை பெற்றுக்கொண்ட ஜேம்ஸ், அதில் அமர்ந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு உணர்ச்சி பெருக்குடன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் இந்த காரை மிகவும் விரும்புகிறேன், இந்த தருணத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் தெளிவாக கூறமுடியவில்லை என்றும் இந்நேரத்தில் என் தாய்- தந்தையரை நினைவு கூர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட இவரது வீடு இருக்கும் பகுதியையும், நிறுவனம் இருக்கும் பகுதியையும் இணைக்க போக்குவரத்து வசதிகள் இல்லாததை இவரது வாழ்க்கை சம்பவம் எடுத்துரைத்துள்ளது.

மேலும் இத்தனை ஆண்டுகாலமும் ஒருநாள் தவறாது பணிக்கு பல கிலோமீற்றர்கள் நடந்தே சென்றுவந்த ஜேம்ஸ் என்ற நேர்மையான பணியாளர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு பலருக்கும் நல்ல எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்.

-http://world.lankasri.com