ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள கிறிஸ்துவர்கள் பலரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் ஹசாக்கான் பகுதியில் அசிரியன் பிரிவை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் வசித்து வரும் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், 400க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களை கடத்தி சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் என கூறப்படுகிறது.
மேலும் பலரை தீவிரவாதிகள் அழைத்து சென்றபோது வழியில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆனால் பிணைக்கைதிகளாய் வைக்கப்பட்ட மற்ற கிறிஸ்துவர்களின் கதி என்ன? என்பது கேள்விக்குறியாய் உள்ளது.
-http://world.lankasri.com/
தீவிரவாத போரில் கொள்ளப்படும் IS தீவிரவாதிகள் மறை சாட்சிகள் என்று கூரிக்கொகிரார்கள். அவர்களால் எவ்வித காரணமும் இல்லாமலும் ஆயுதங்களும் இல்லாமல் நிர்கதியாக தமது சமய நம்பிக்கைக்காக கொள்ளபடுபவர்களும் மறைசட்சிகளே (MARTYRS ) உலகின் அந்த பகுதிக்கு இறைவனின் சாபமோ என்னவோ, எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அந்த பகுதியில் அமைதியோ சமாதானமோ நிலவவேயில்லை. இறைவன் அம்மக்கள் மீது தமது இரக்கத்தை காண்பித்து அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்த நாம் அனைவரும் பிராத்திப்போம்.