ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் மாஸ்கோ நகரில் மத்திய பகுதியில் கிரம்ளின் மாளிகை அருகே காரில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்தஅடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கியால் நான்கு முறை சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
யுக்ரெயினில் இடம்பெறும் யுத்தத்துக்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு அவர் ஆதரவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
எனினும் இந்த கொலை சம்பவத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரின் எதிரிகள் சிலர் கூலிப்படையை வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் தனிக்கட்டுப்பாட்டின் கீழ் அவரது மரணம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
விளாடிமிர் புடினுக்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதி சுட்டுக்கொலை
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான போரிஸ் நெம்ஸ்ட்சோவ்(Boris Nemtsov- 54) அடிக்கடி போராட்டங்களை நடத்தியும், அரசினை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
மேலும் வருகிற ஞாயிறன்று உக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு(வெள்ளிக்கிழமை) தலைநகர் மொஸ்கோ நகரில் மத்திய பகுதியில் கிரம்ளின் மாளிகை அருகே காரில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு விளாடிமிர் புடின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், அவரின் மரணம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யாவில் போரிஸ் எல்ட்சின் அரசின் போது போரிஸ் நெம்ஸ்ட்சோவ் துணை பிரதமர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com