ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் காதல் கொண்டு அவர்களை திருமணம் செய்து கொள்ள சிரியா செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு காதல் சாகச பயணம் செய்ய வேண்டாம் என்றும் அங்கு சென்று ஜிகாதி மணமகள் ஆக வேண்டாம் எனவும் எச்சரிக்கிறோம்.
தற்போது சிரியாவுக்கு இளம்பெண்கள் செல்வது அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்த பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட்டு பிரிக்கப்படுகிறார்கள்.
இதுவரை தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து 110க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாணவிகள் என்பது மிகவும் வருந்ததக்கது. மேலும் இவர்களின் செயல் குடும்பத்தினருக்கு தாமதமாகத்தான் தெரியவருகிறது.
இவர்களின் மரணம் என்பது தியாகம் இல்லை. இந்த முட்டாள்தனமான முடிவை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com
இங்கு மட்டும் என்ன வாழுதாம்.