ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அல்கொய்தாவை களமிறக்குகிறது யு.எஸ்?

isis-india2சிரியா: ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அல்கொய்தாவை களமிறக்குகிறது யு.எஸ்? சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது.

ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலையைத்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் எதிர்கொள்ள நேரிட்டது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கியது அல் கொரசான் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு. இதுதான் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் குடைச்சலான தலிபான் அமைப்பு.

அதேநேரத்தில் முல்லா ஒமர் தலைமையிலான தலிபான் அமைப்பு ‘ரொம்பவும் நல்ல’ தலிபான்கள் என்று பாராட்டு பத்திரம் வாசித்தது அமெரிக்காவும் பாகிஸ்தானும். இதனாலேயே தெஹ்ரிக் இ தலிபான்களுக்கு எதிராக முல்லா ஒமர் தலைமையிலான தலிபானை களமிறக்குவது குறித்து பரிசீலித்தது அமெரிக்கா.

தற்போது சிரியாவில் அல்கொய்தாவின் முகமாக செயல்படுகிற அமைப்புதான் ஜபத் அல் நுஸ்ரா. அமெரிக்கா அல்கொய்தாவுக்கு தடை விதித்திருக்கிறது. ஆனால் அதன் மற்றொரு முகமான ஜபத் அல் நுஸ்ராவுக்கு தடை விதித்துவிடவில்லை.

புதிதாக ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக ஜபத் அல் நுஸ்ராவை பயன்படுத்துவது குறித்துதான் அமெரிக்கா பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இருந்த போதும் ஜபத் அல் நுஸ்ரா அவ்வளவு எளிதாக அமெரிக்காவை நம்பிவிடாதுதான்.. ஏனெனில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களில் அந்த இயக்கத்தின் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இருந்த போதும் அமெரிக்காவோ, தவறுதலாக அது நிகழ்ந்துவிட்டது என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அமெரிக்காவின் முகமாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இனி ஜபத் அல் நுஸ்ராதான் களமிறங்கும் என்றே தெரிகிறது.

http://tamil.oneindia.com