“வெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மை’ தேசமாக மாறி வரும் அமெரிக்கா

Portrait of a group of childrenவெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள தேசமாக அமெரிக்கா மாறி வருவதாக அந்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மைக் குழுக்களின் குழந்தைகளின் அளவு 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதையடுத்து, அதற்கடுத்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.

2044-ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் வசிப்போர் எண்ணிக்கை 7.8 கோடியாக அதிகரிக்கும். 2060-ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 20 சதவீதமாக இருப்பர்.

அதே சமயத்தில், தற்போது 52 சதவீதமாக உள்ள வெள்ளை இனக் குழந்தைகளின் விகிதம் 36 சதவீதமாகக் குறைந்து விடும். வெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள தேசமாக அமெரிக்கா மாறும் நிலை ஏற்படும்.

எந்தக் குறிப்பிட்ட இனக் குழுவும் தனி ஆதிக்கம் செலுத்தும் விதமான எண்ணிக்கையைக் கொண்டிருக்காது என்ற நிலை ஏற்படும் என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com