நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 58 பேர் பலி

nigeria-explosions-1நைஜீரியாவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தலைநகர் மைதுகுரியில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

மைதுகுரியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பாகா மீன் மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் வந்த பெண் ஒருவர், தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இதையடுத்து, மக்கள் அதிகமாகக் கூடும் “திங்கள் சந்தை’ என்ற இடத்தில், இரண்டாவது குண்டு வெடித்தது. ஒரு மணி நேரம் கழித்து, மாநில தலைமைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து முனையத்தில், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இரண்டாவது, மூன்றாவது குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உறுதியான தகவல்கள் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது, போகோ ஹராம் தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

-http://www.dinamani.com