“கருப்பினத்தவர்களை வாழவிடுங்கள்”: கதறும் மக்கள்

americablack_shoot_001அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தாக்கப்படுவதும் பின்னர் போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசன் என்ற பகுதியில், டோனி ராபின்சன் என்ற 19 வயது இளைஞரை விசாரிக்க சென்ற பொலிஸ் ஒருவர், திடீரென அந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் உயிருக்கு போராடிய அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த வாலிபர் இறந்து போனார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று காவல்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, பொலிசாருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

“கருப்பர்களையும் வாழ விடுங்கள்” என்று கோஷமிட்டபடியே அவர்கள் ஊர்வலம் சென்றனர்.

-http://world.lankasri.com