தீவகற்ப மலேசியாவிலிருந்து சாபா, சரவாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியல் அதிகாரத்துவ இரகசியச் ச் சட்டத்தின்கீழ் வருவது என்பதால் அதை வெளியிட முடியாது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
அம்மாநிலங்களில் கால்வைக்க முடியாதவர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு திரேசா கொக் கேட்டதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அப்பட்டியல் அதிகாரிகளின் உத்தரவுக்கேற்ப அடிக்கடி மாறும் என்றும் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
“உள்துறை அமைச்சு மலேசியர்களை அல்லது வெளிநாட்டவர்களைத் தடை செய்யுமாறு சாபா, சரவாக் குடிநுழைவுத் துறைகளுக்கு உத்தரவிடுவதில்லை”, என்பதை அவர் வலியுறுத்தினார்.
மாநில அதிகாரிகளே அம்முடிவினைச் செய்கிறார்கள் என்றாரவர்.
வாயைத் திறந்தாலே பொய்யும் புரட்டும்தான் இந்த அம்னோ அமைச்சரிடமிருந்து கொட்டுகிறது… நாடு நன்றாகவே விளங்கும்…
காலபோக்கில் umno காரர்கள் ,சபா,சரவாக்கில் காலடி வைப்பதற்கு அந்நாட்டு மக்கள் கட்டளை விட, வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மலேசியாவில் பிறந்த மலேசிய குடிமக்களுக்கு சபா,சரவாக் செல்லத் தடை ஆனால் கள்ளக்குடியேறிகள் அதுவும் “அரசாங்கம் ஓட்டுக்காக இறக்குமதி செய்த கள்ளக்குடியேறிகள்” சபா,சரவாக் செல்லத் தடையுமில்லை, சபா,சரவாக் சென்றடைந்தவுடன் இந்த கள்ளக்குடியேறிகளுக்கு மலேசிய குடிமகன் என்ற அந்தஸ்தோடு மலேசிய அடையாள அட்டை வழங்கி மலேசிய குடிமகளையும் திருமணம் செய்து கள்ளக்குடியேறிகளை மருமகன் என்று அழகு பார்ப்பதில் நமது அரசாங்கத்திற்கு எந்த நாடும் ஈடாகாது.
சுருக்கமாக கூறினால் நமது அரசாங்கம் “கூட்டி கொடுப்பதில்” அதாவது “மாமா” வேலை செய்வதில் உலகிலேயே மிக சிறந்தவர்கள் என்பதை நிருபித்து உள்ளார்கள்.
anonymus அற்புதமாக சொன்னீர்கள்…