சவாலாகத் திகழும் பாகிஸ்தான்: சி.ஐ.ஏ.

இராக், சிரியா, வட கொரியாவைப் போலவே பாகிஸ்தானும் தங்களுக்கு சவாலாகத் திகழும் நாடாக அமைந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜான் பிரென்னன் கூறியதாவது: இராக், சிரியா, யேமன், லிபியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், கொள்கை வகுப்போருக்கும், உளவு அமைப்புகளுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் நகர ராணுவப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் தலிபான்களின் குரூர எல்லையையே மீறுவதாக அமைந்துள்ளது.

அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள், கட்டுக்கடங்காத, எளிதில் புலப்படாத, வீழ்த்துவதற்குக் கடினமான பயங்கரவாதம் மெல்ல மெல்ல தலையெடுத்து வருவதைக் காட்டுகின்றன என்றார் அவர்.

-http://www.dinamani.com