திங்கள்கிழமை கிளானா ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறை வளாகத்தில் உள்ளமர்வுப் போராட்டம் நடத்திய சமூக ஆரவலர்களில் 25-பேர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் கைதான 48-மணி நேரத்தில் இது நடந்துள்ளது.
2012 அமைதிப் பேரணிச் சட்டத்தின் பிரிவு 21(1) (டி)-இன் கீழும் அத்துமீறலுக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 447-இன் கீழும் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ரிம20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
திங்கள்கிழமை சுமார் 100 சமூக ஆர்வலர்கள் ஜிஎஸ்டி தொடர்பில் 106 கேள்விகளுக்கு விடை தேவை என்ற கோரிக்கையுடன் சுங்கத் துறை வளாகத்தை முற்றுகை இட்டனர். அங்கு உள்ளமர்வுப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. போலீசார் அக்கூட்டத்தைக் கலைத்ததுடன் அவர்களில் 82-பேரைக் கைது செய்தனர்.
மக்கள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தால் போலிஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். மக்கள் உரிமை பறிபோவதை யாராலும் ஏற்க முடியாது….
நம் நாட்டில் கொலை குற்றவாளியை கூட இவ்வளவு வேகமாக விசாரணை செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்க மாட்டார்கள் .