கித்தா லவான், எதிர்வரும் சனிக்கிழமை சோகோ விற்பனை வளாகத்தில் மிகப் பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்படியே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவும் அது திட்டமிட்டுள்ளது.
மார்ச் 28-இல், சோகோவிலிருந்து கோலாலும்பூர் மாநாட்டு மையம்(கேஎல்சிசி)வரை ஊர்வலம் செல்லும் திட்டமிருக்கிறது என்றும் ஆனால், அது அன்றைய நிலைமையைப் பொறுத்து அமையும் என்று பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினரும் ஜிங்கா 13 தலைவருமான ஃபாரிஸ் மூசா கூறினார்.
“கேஎல்சிசி-க்குச் சென்று நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் திருமணத்திலும் கலந்துகொள்ள திட்டமுண்டு, ஆனால், சுற்றிலும் பல தடைகள் இருக்கும் என நினைக்கிறேன்”, என்றாரவர்.
எதிர்வரும் பேரணி, சுமார் 10,000 பேர் கலந்துகொண்ட மார்ச் 7 பேரணியைவிட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது.
இந்தத் தடவை கித்தா லவான் பேரணி சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காகக் கோரிக்கை விடுவதுடன் பொருள், சேவை வரி மீதும் கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது.
அத்துடன் அவர்கள் பிரதமர் மற்றும் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஆகியோரின் பதவி விலகலுக்கும் கோரிக்கை விடுப்பார்கள்.
வேலை வெட்டி இல்லாத நாதாரிகள் ….
நம் சேரவில்லை அனல் செய்வருக்கு அதரவு அளிப்பும்.
சட்டம் போட்டு திட்டம் தீட்டுங்கோ காசா பணமா ?
கீத லவன் அவங்க குடும்ப பெரசன உண்மையான மரதமிழன் இதை ஆதரிககூடது அவங்க சாதிகரன் எல்லாம் ஜெயில்ல போடமா தமிழன
உள்ள தலுவங்க அப்புரம் நம்ம தன கோர்ட் கேஸ் என்று
ஹலயுனும் அவங்க குடு ம்பதுகு நெறைய லேயர் இருக்கனுங்க உன்ன்களுக்கு யார் இருக்க சிந்திது பாருங்க உண்ணக குடும்பத்த வாழ்க தமிழன்