ஈரான் ஒரு இராணுவ சர்வதிகாரக் கட்டமைப்பாக உருமாறிவருகிறது இதனால் ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக இனி அந்நாட்டில் சீர்திருத்தப் போராட்டம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே அனைத்துலகத்தின் உதவியை நாடுதல் நலம் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஈரானை உண்மையில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுவது ஈரானிய அரசாங்கத்துடன் உறவாட அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கின்றன என்று ஹிலாரி கிளிண்டன் பிபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ஒபாமா ஆட்சிக்கு வந்த உடனேயே தான் ஈரானிய ஆட்சியாளர்களுடன் பேசுவதற்கும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் முயற்சி எடுக்கத் தயார் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் அந்த நாட்டில் யார் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது என்று கிளிண்டன் குறிப்பிட்டார்.
ஈரானிய அரசாங்கத்துடன் உறவாட முயன்று பலன் தராத நிலையில், ஈரானிய மக்களுடன் வேறு வழிகளில் உறவாட அமெரிக்கா முயற்சிகள் எடுத்துவருவதாக கிளிண்டன் தெரிவித்தார்.
ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக இனி அந்நாட்டில் சீர்திருத்தப் போராட்டம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே அனைத்துலகத்தின் உதவிகளை நாடுதல் நலம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கருத்திலிருந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரான் என கருதப்படுகிறது. அமெரிக்காவின் சதிதிட்டத்தினால் லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் 42 ஆண்டுகள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவருடைய நாட்டு மக்களாலேயே அவர் அடித்துக்கொல்லப்பட்டார்.