ஆட்சியாளர் மன்றம் ஹூடுட் சட்டம் கிளந்தானில் அமலாக்கப்படுவது பற்றி விவாதிக்கவே இல்லை. ஆனால், அது நடந்ததாக ஒரு செய்தி கூறுகிறது.
“ஆட்சியாளர் மன்றம் அதன் எந்த ஓர் கூட்டத்திலும் அந்த விவாகாரத்தை (ஹூடுட்) பற்றி விவாதிக்கவில்லை.
“நமது அலுவலகம் ஹூடுட் விவகாரம் குறித்து மார்ச் 25 தேதியிடப்பட்ட அறிக்கையை வெளியிடவில்லை”, என்று ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் சைட் டானியல் சைட் அஹமட் கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
இந்த போலியான அறிக்கை குறித்து ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் இன்று டிரேவர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
“நாங்கள் இதை விசாரிப்போம். இது உண்மையல்ல. சிலர் ஆட்சியாளர் மன்றத்தை உள்ளே இழுக்க முயற்சிக்கின்றனர். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நம்பிவிடக்கூடாது, குறிப்பாக சமுதாய ஊடகத்தில் காணப்படுபவைகளை”, என்று தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் அஹமட் ஷாபெரி சீக் கூறினார்.
”
பேசும்போது வாயில் ஜொல் ஒழுகும் எருமையே !
உன்னுடைய அறிக்கைக்கு மக்களின் ஒரு வரி பதில்
“நம்ப முடியவில்லை”
நெருப்பில்லாமல் புகையாது!.