பாஸ் கட்சியின் துனைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவினரால் நள்ளிரவில் செபராங் ஜெயா, பினாங்கில் கைது செய்யப்பட்டார்.
இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்வாரை விடுவிக்கக் கோரும் கித்தா லவான் நிகழ்ச்சியில் மாட் சாபு பங்கேற்பதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பினாங்கு மாநில பாஸ் கமிஷனர் I முஜாகிட் யுசுப் ராவா இக்கைது சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பட்டர்வொர்த், சுங்கை டுவாவிலுள்ள செவன் ஸ்டார்ஸ் காப்பிக் கடையில் தாம் முகமட் சாபுவுடன் இருந்த போது போலீசார் அவரை பிடித்துச் சென்றனர் என்று அவர் கூறினார்.
“அவரை கைது செய்யும் போது போலீசார் முகமூடி அணிந்திருந்ததுடன் ஆயுதங்களும் வைத்திருந்தனர்”, என்று முஜாகிட் தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.
போலீசார் மாட் சாபுவை கோலாலம்பூருக்கு கொண்டு செல்லக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
அதிகாரத்துவ அம்னோவிற்கு ஏழரை சனி பிடித்துவிட்டதால், என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை. கைது மேல் கைது. நஜிபிற்கு பித்தம் தலைக்கேறிவிட்டதால், அழிவை தானே தேடிக் கொள்கிறார். கைது நடவடிக்கைகளால் அரசின் மேல் மக்கள் மேலும் மேலும் வெறுப்படைகின்றனர். போதாக்குறைக்கு இன்னும் சில தினங்களில் GST அமலாக்கத்தால் வெறுப்பின் உச்சிக்கே மக்கள் போகக்கூடும்.
ஆட்டம் கண்டால் புத்தி மங்கும் என்பது தெள்ளத் தெளிவு. கடத்தியவர்கள் போலீசா அல்லது கடத்தல்காரர்களா?? தற்காப்புக்காக கடத்தல்காரர்கள் மீது தாக்குதல் செய்திருந்தால் என்னவாகும்? “சட்டம் என் கையில்” என்ற கொள்கை சினிமாவுக்கே சொந்தம். ஜனநாயக வாழ்க்கையில் அல்ல…அராஜகம் ஒடுக்கப்படவேண்டும்…
போலீசாராக இருந்ததால் ஏன் கொள்ளையர்கள் போல் முகமூடி அணிந்திருக்கவேண்டும்? இதுவும் நடைமுறையில் இல்லா போலிசின் (SOP)யோ ???
அடக்குமுறை ஆட்சி தலை விரித்து ஆடுகிறது. எல்லாம் ஆங்கில பள்ளிகளை இல்லாமல் ஆக்கியதன் விளைவு.
மிகமூடிஅணிந்தவர்கள் என்றால் ஒரூவேளை Is தீவிரவாதிகள்.மாட் சாபுவை படித்து சென்றுள்ளார்களோ?
I GP காலிட் தீவிரமாக விசாரிப்பார்காவலை படவேண்டாம்!
ஜிஎஸ்டி,,,,ஒரு பக்கம் இருக்க உடுட்,,,சிஸ்டம் என்ன பண்ணுவாங்களோ ஆனால் நம்ம பசங்க எப்பையோ,,,உடுட் சிஸ்டம் பாவிசிடாங்க,,,சராவறிய கைய கால அப்பையே எடுத்துடாங்க,,,இபோ என்ன புதுசா உடுட் …..
ஹுடுட் சட்டப்படி 100 பிரம்படி கொடுக்கணும்.
ஆமாம் தலைவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் போல கைது செய்வான்கள். ஆனால் உண்மையான தீவிரவாதிகளிடம் வெள்ளை கொடி பிடித்து சமாதானம் பேசுவான்கள்
நண்பர் கும்கி ஹுடுத் சட்டத்தில் குற்றம் செய்தால் 100.பிரம்படியிலிருந்து 20.சதவீதம் கழித்துக்கொள்ளப்படும்.மது.மாதுக்க. கழிவு தாடா!