நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தலைமையகத்தை ராணுவம் அழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள க்வோஸா நகரை கடந்த ஆண்டு கைப்பற்றிய போகோ ஹராம் தீவிரவாதிகள், சிபோக் நகரில் உள்ள ஒரு பெண்கள் உறைவிடப் பள்ளியில் தங்கியிருந்த சுமார் 200 மாணவிகளை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் அதிபர் குட்லக் ஜொனாத்தன் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள், போகோ ஹராம் தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை அழித்துள்ளனர். இந்த மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக போகோ ஹராம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள க்வோஸா நகரை முற்றுகையிட்ட ராணுவ வீரர்கள் அவர்களின் தலைமையகத்தை தாக்கி அழித்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று செய்திகள் வெளியிட்டுள்ளன.
-http://world.lankasri.com