அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் அறிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதனால் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும், ஆனால் ஒருபோதும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அசாத்திடம் பேரம் பேசமாட்டோம் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அசாத், ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் சாதகமான அம்சம்தான். எனவே பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமெரிக்கா உள்பட யாருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாஷிங்டன்- டமாஸ்கஸ் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றும், சிரியாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏதும் நிகழாத வகையில் நடைபெறும் எந்த பேச்சுவார்த்தையும் வரவேற்கத்தக்க ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com
இவனை முதலில் ஒழிக்க வேண்டும். இல்லை என்றால் போர் நிறுத்தம் நடக்காது, புதிய ஜனநாயக தேர்தல் நடக்காது. மக்களுக்கு இன்னும் நிறைய போர் கருவிகள் தந்து, போரை அமெரிக்க முன் எடுக்க வேண்டும்.