அஸ்மின்: பாஸுடனான உறவை முறித்துக்கொள்வது பிகேஆரின் நிலைப்பாடு அல்ல

 

povertyபாஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள சாபா பிகேஆர் எடுத்துள்ள முடிவு பிகேஆரின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு அல்ல என்று பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

அக்கட்சியின் சாபா தலைவர் லாஜிம் உகின் மற்றும் சாபா டிஎபி தலைவர் ஜிம்மி வோங் ஆகியோர் பாஸ் கட்சியுடனான உறவை முடித்துக்கொள்வதாக நேற்று அறிவித்தனர்.

“நாங்கள் மாநிலத்தின் விளக்கத்தை செவிமடுத்து அதனை அரசியல் பிரிவு கூட்டத்தில் எழுப்புவோம். பக்கத்தான் ரக்யாட்டை தற்காத்து பலப்படுத்துவது எங்களது தேசிய அளவிலான நிலைப்பாடாகும்.

“(பக்கத்தான் சாபா மற்றும் சரவாக்) உடைபடவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவை மாநில அளவில் இருக்கின்றன. ஆனால், இறுதி முடிவு மத்திய அளவில் எடுக்கப்படும்”, என்று அஸ்மின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற கட்டடத்தில் இன்று சந்தித்த போது கூறினார்.