ஊடக பதிப்பாளரும் செய்தியாசிரியரும் விடுதலை

edgeதி எட்ஜ்  செய்திதாளின் பதிப்பாளர்  ஹோ கேய் தாட்டும்  மலேசியன்  இன்சைடர் (டிஎம்ஐ)  தலைமை செயல் அதிகாரி  ஜகபர் சாதிக்கும்  விடுவிக்கப்பட்டிருப்பதாக  அவர்களின்  வழக்குரைஞர்கள்  தெரிவித்தனர்.

த  மலேசியன்  இன்சைடர்  செய்தித்தளத்தில்  வெளியான  ஒரு  செய்திக்காக  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  அவர்கள் நேற்று  கைது  செய்யப்பட்டு, கைதான  24-மணி  நேரத்தில்  விடுதலை  செய்யப்பட்டனர்.

ஹோ-வையும்  ஜகபரையும்  விசாரணைக்காக  தடுத்து  வைக்க நீதிமன்ற  உத்தரவைப்  பெற போலீஸ் முயலவில்லை  என  அவர்களின்  நிறுவன   வழக்குரைஞர்  ஷியாரெட்சான்  ஜொஹான் கூறினார்.

“புலன்  விசாரணையில்  பெரும்பகுதி  முடிந்து  விட்டது  என்ற  முடிவுக்கு  விசாரணை  அதிகாரி  வந்திருந்தார்”, என்றாரவர்.

திங்கள்கிழமை  த  மலேசியன்  இன்சைடரின்   மூத்த  செய்தியாசிரியர்கள் மூவர்- லயோனல்  மொராய்ஸ், அமின்  ஷா  இஸ்கண்டர்,  சுல்கிப்ளி  சூலோங்- இதே  குற்றச்சாட்டின்கீழ்  கைது  செய்யப்பட்டனர்.  ஆனால், அவர்களைக்  காவலில்  வைக்க  அனுமதிகேட்டு  போலீசார்  செய்த  மனுவை  மெஜிஸ்திரேட்  நிராகரித்ததை  அடுத்து  மூவரும்  விடுவிக்கப்பட்டனர்.