தி எட்ஜ் செய்திதாளின் பதிப்பாளர் ஹோ கேய் தாட்டும் மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) தலைமை செயல் அதிகாரி ஜகபர் சாதிக்கும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர்களின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
த மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்திக்காக தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, கைதான 24-மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹோ-வையும் ஜகபரையும் விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்ற உத்தரவைப் பெற போலீஸ் முயலவில்லை என அவர்களின் நிறுவன வழக்குரைஞர் ஷியாரெட்சான் ஜொஹான் கூறினார்.
“புலன் விசாரணையில் பெரும்பகுதி முடிந்து விட்டது என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரி வந்திருந்தார்”, என்றாரவர்.
திங்கள்கிழமை த மலேசியன் இன்சைடரின் மூத்த செய்தியாசிரியர்கள் மூவர்- லயோனல் மொராய்ஸ், அமின் ஷா இஸ்கண்டர், சுல்கிப்ளி சூலோங்- இதே குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களைக் காவலில் வைக்க அனுமதிகேட்டு போலீசார் செய்த மனுவை மெஜிஸ்திரேட் நிராகரித்ததை அடுத்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.